தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.1.12

அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு தயார் – பஹ்ரைன் மன்னர் அறிவிப்பு


மனாமா:அரசு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் பஹ்ரைனில் அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு தயார் என மன்னர் ஹமத் பின் ஈஸா அல் கலீஃபா அறிவித்துள்ளார்.பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மன்னர் குடும்பத்திற்கான அதிகாரங்களை வெட்டிக் குறைக்கப்படும் வகையிலான சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படும் என மன்னர் விளக்கமளித்துள்ளார்.

நேற்று மன்னர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
*பாராளுமன்றத்தில் கீழ் சபையை கலைக்க இனி மன்னரால் மட்டும் முடியாது. சபை உறுப்பினர்களை கலைப்பதற்கு முன்னால் அரசியல் சட்ட நீதிமன்றத் தலைவருடனும், இரு அவைகளிலும் பிரமுகர்களிடமும் ஆலோசனை நடத்தப்படும்.
*நாட்டில் பட்ஜெட் தயாரிப்பதற்கு இனி பாராளுமன்றத்திற்குத்தான் முதலிடம்.
*சீர்திருத்தங்களை மன்னர் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மன்னரின் அறிவிப்புகள் முகத்தை அழகுப்படுத்துவதாகும் என குற்றம் சாட்டிய முக்கிய எதிர்கட்சியான அல வஃபாக் கட்சியின் அப்துல் ஜலீல் கலீல், எல்லா அர்த்தத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட நிர்மாண சபைதான் தேவை என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளையில் மனித உரிமை ஆர்வலர்கள் மன்னரின் அறிவிப்பை வரவேற்றுள்ளனர். சரியான திசையை நோக்கிய சாவகாசமான பயணம் என அவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
இதற்கிடையே, அரச ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்களை கலைத்துவிட ராணுவம் நடத்திய கண்ணீர் குண்டுவீச்சில் ஒரு வயோதிகப் பெண்மணி உயிரிழந்தார். அவரது பெயர் ஸல்மா அப்துல் முஹ்ஸின் என்பதாகும். கண்ணீர் புகையால் மூச்சுவிட தடை ஏற்பட்டதே மரணத்திற்கு காரணம்

0 கருத்துகள்: