ஈரான் மீது நடாத்தப்பட வேண்டிய போரும், சிரியாவில் ந டைபெற வேண்டிய ஆட்சி மாற்றமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த விவகாரம் என்பது படிப்படியாக அம்ப லமாகி வருகிறது. நேற்று முன்தினம் ஏழு ஈரானியர்கள் சிரியாவில் வைத்து கைது செய்யப்பட்டார்கள். இவர்கள் கைதை சிரியாவின் போராளிக்குழுவான நாலாவது சிரிய ப்படைப்பிரிவு என்ற அணியின் தலைவர் மாலிக் அல் குர் பு உறுதி செய்தார். இவர்களில் ஐவர் ஈரானிய றெவலூச நெறிகாட் படைப்பிரிவின் நிபுணர்கள்
என்றும், மற்றய இருவரும் சாதாரணமா னவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆர்பாட்டங்கள் முனைப்பாக நடைபெறும் கோம்ஸ் நகரத்தில் இவர்கள் காணப்பட்டுள்ளார்கள். இவர்களை எப்படி கைது செய்தார்கள் என்பதை அவர் வெளியிடவில்லை. ஈரானிலும் இதுபோன்ற கலவரங்கள் தூண்டிவிடப்படலாம் என்ற அச்சத்தில் பஸாட் அல் ஆஸாட்டின் உதவியுடன் இவர்கள் உள்ளே வந்தார்களா..? இல்லை சிரியாவில் நடைபெறும் ஆர்பாட்டங்களை அடக்கவும், அவதானிக்கவும் இறக்கப்பட்ட நிபுணர்களா இவர்கள்..? என்ற இரு கேள்விகள் எஞ்சியுள்ளன. சிறீலங்காவில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் ஏழு நாடுகளின் இராணுவ நிபுணர்கள் வன்னி சென்று நிலமைகளை உளவறிந்து தாக்குதலில் மாற்றம் செய்தது போன்ற ஒரு நாசகார செயலுக்காகவே இவர்கள் களமிறங்கியிருக்க வாய்ப்புக்கள் உள்ளன.

இது இவ்விதமிருக்க சிரியாவுக்கு அனுப்பப்பட்ட அரபுலீக் கண்காணிப்புக் குழுவின் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று அரபுலீக் அதிரடியாக அறிவித்தது. இந்தக் குழுவினர் சிரியாவில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படவில்லை அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அரபுலீக் தலைமை ஆயத்தின் உத்தரவு கிடைத்ததும் வெளியேறுவார்கள். சிரியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறைகளும், படுகொலைகளும் கண்காணிப்புக் குழுவை அவசியமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. ஈரானிய படை நிபுணர்கள் அடையாளம் கண்டு கைது செய்யப்படுமளவுக்கு பலமான சக்தியொன்று சிரிய அரசுக்கு எதிராக களமிறங்கியுள்ளமை தெரிகிறது. அனைத்து சர்வதேச சக்திகளும் சிரியாவில் களமிறங்கிவிட்டன. ரஸ்யாவில் வரும் மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்று சர்வாதிகாரி புற்றின் ஆட்சிக்கு வர முன்னர் ஈரான், சிரியா இரு நாடுகளிலும் முக்கிய நகர்வுகள் முடிக்கப்பட்டுவிடும் என்பதை தெளிவாக உணர முடிகிறது.
மறுபுறம் நேற்று சனி இங்கிலாந்து வந்த ஏமன் நாட்டின் சர்வாதிகாரி அலி அப்துல்லா சலா அங்கிருந்து அமெரிக்க வீசா பெற்று அமெரிக்கா புறப்பட்டார். இவருக்கு மருத்துவ காரணங்களுக்காக வீசா வழங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 1978 ம் ஆண்டில் இருந்து ஏமன் நாட்டில் சர்வாதிகாரம் பண்ணிய சலா பதவி விலகிப்போவது ஏமன் நாட்டில் ஜனநாயகத்தை மறுபடியும் கொண்டுவர உதவும் என்று இன்றைய ஐரோப்பிய காலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக