ஈரானுக்கு எதிராக தடைகளை கொண்டுவரவுள்ள ஐரோ ப்பிய ஒன்றியம் இந்த வாரம் அந்த நாட்டில் இருந்து இறக் குமதியாகும் ஓயிலை முற்றாக நிறுத்தவுள்ளது. இந்த மு டிவு எடுக்கப்படும் விவகாரத்தை இனி ஈரானால் தடுக்க முடியாது. இதற்கு பதிலடி வழங்க வேண்டிய நிலை இப் போது ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்த இறுதி முடி வெடுக்க இன்று ஞாயிறு ஈரானிய பாராளுமன்றம் கூடுகி றது. ஐரோப்பிய ஒன்றியம் ஓயில் இறக்குமதியை நிறுத் த முன்னர் ஈரான், ஐரோப்பிய நிறுவனங்களு
க்கு ஏற்றுமதி செய்யும் ஓயிலை முற்றாக நிறுத்தவுள்ளது. நீங்கள் என்ன நிறுத்துவது உங்களுக்கு முன்னர் நாங்களே நிறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது. இதனால் ஈரானிடமிருந்து ஓயிலை வாங்கி விற்பனை செய்யும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் பலத்த நஷ்டமடைய நேரிடும் என்றும்: இது கவலை தரும் விடயம் என்றும் ஈரானிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
க்கு ஏற்றுமதி செய்யும் ஓயிலை முற்றாக நிறுத்தவுள்ளது. நீங்கள் என்ன நிறுத்துவது உங்களுக்கு முன்னர் நாங்களே நிறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது. இதனால் ஈரானிடமிருந்து ஓயிலை வாங்கி விற்பனை செய்யும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் பலத்த நஷ்டமடைய நேரிடும் என்றும்: இது கவலை தரும் விடயம் என்றும் ஈரானிய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
ஈரான் மீதான நடவடிக்கைகளை வேண்டாம் என்று பிரான்சிய அதிபர் ஸார்கோஸி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஈரானின் எண்ணெய் உற்பத்தி வயல்களில் மிகப்பெரிய முதலீடுகளை செய்துள்ளது சீனா. இன்றைய உலகப் பொருளாதாரத்தில் சீனா பெற்றுள்ள முதன்மையை வீழ்த்த மேலை நாடுகள் முயலும். முதலாம் உலகப்போர் ஆரம்பிக்க முன்னர், ஜேர்மனிய சக்கரவர்த்தி பேர்டினன்ட் வில்லியம் இழைத்த அதே தவறை இப்போது சீனாவும், இந்தியாவும் இழைத்துக் கொண்டிருக்கின்றன. பொருளாதாரத்தில் மேலை நாடுகளுக்கு சவாலாக புறப்படும்போது அவை கண் மூடி இருக்க மாட்டாது என்று வொன் பிஸ்மார்க் ஆலோசனை கூறியும் அன்று பேர்டினன்ட் வில்லியம் கேட்க மறுத்து உலகப்போரை சந்தித்தான். இப்போது சீனா, இந்தியா இரு நாடுகளுக்கும் சரியான புத்தி சொல்ல சிறந்த பிஸ்மார்க் போல சிறந்த இராஜதந்திரி ஒருவன் இருப்பதாக தெரியவில்லை. இவ்விரு நாடுகளும் பொருளாதாரத்தில் அடைந்துள்ள வளர்ச்சியை மட்டுப்படுத்தும் வகையில் பிரச்சனைகள் வெடிக்கும். சீன முதலீடு உள்ள இடங்கள் எல்லாம் இப்போது தீப்பற்றி எரிவது இதற்கு ஓர் உதாரணமாகும். அதேவேளை தற்போது முதலிடத்திற்கு போட்டியிடும் சீனா இயல்பாகவே ரஸ்யாவை முந்திவிட்டது. இழந்த இரண்டாவது இடத்தை மறுபடியும் பிடிப்பேன் என்று ரஸ்ய சர்வாதிகாரி புற்றின் முழங்கியுள்ளார். இப்போது ஈரானில் நடைபெறும் நகர்வுகளில் சீனாவின் வீழ்ச்சியும் கலந்துள்ள காரணத்தால் ரஸ்ய பனிக்கரடி இந்த விவகாரத்தில் அமைதியாகப் படுத்திருக்க வாய்ப்புள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக