தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.1.12

டைம்ஸ் நாளிதல் அலுவலகத்தின் மீது சிவசேனா தாக்குதல்

சிவசேனா கட்சியினர், மும்பையில் இயங்கி வரும் மகா ராஷ்டிரா டைம்ஸ் நாளிதழின் அலுவலகத்தின் மீது தாக் குதல் நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. சிவசேனா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் சிவாஜி மானே, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இ ன்று இணைகிறார் என்ற செய்தியில், சிவாஜி மானே பெய ருக்கு பதிலாக இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந் த்ராவ் அட்சூல் பெயர் இடம் பெற்றிருந்தது.இதனையடுத் து, அட்சூலின் ஆதரவாளர்கள், இன்று
பகல் 1 மணியளவில் மகாராஷ்டிரா டைம்ஸ் நாளிதழின் அலுவலகம் இயங்கி வரும் கட்டிடத்திற்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.மேலும் அவர்கள் அப்பத்திரிகையின் பிரதிகளை எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கும், சிவசேனா கட்சியினருக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று சிவசேனா கட்சி செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான சஞ்சய் ரவுட் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா டைம்ஸ் பத்திரிகை, டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: