நியூயார்க், ஜன. 22- அமெரிக்காவுடன் தலிபான் அமைப்பு ரகசிய ஒப்பந்த அமைதி பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் எ ன்று ஆப்கான் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இ ந்த ரகசிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானும் ப ங்குபெறுமா? என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் அவர்களின் தலைமை அதிகாரி கரீம் குர்ராம் இது தொடர்பாக வருத் தம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது- இந்த ரகசிய ஒப்பந்த பேச்சுவார்த்தையைப் பற்றி ஆப்கான் அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அவ்வப்போது, தலிபான் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அமெரிக்கா கூறிவந்தது. ஆனால் எங்களுக்கு முழு விவரம் எதுவும் தெரியாது.
எங்களுக்கு தெளிவான விவரம் தேவை. மேலும், இந்த ரகசிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் நாட்டின் பங்கு குறித்து ஆப்கான் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறிய குர்ராம் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் நாட்டின் பங்கு இருக்குமா என்று அமெரிக்கர்களிடம் கேட்டதாகவும் அதற்கு அவர்கள் தகுந்த பதிலை அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் அலுவலகம் ஒன்றை திறப்பதற்கு தலிபான் அமைப்புடன் அமெரிக்கா முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்க தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக