தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.1.12

ஜெய்ப்பூரின் இலக்கிய விழாவில் ருஷ்டியின் சாத்தானின் கவிதைகள் வாசிக்கப்பட்டதால் சலசலப்பு


சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி, பாதுகாப்பு காரணங்களால்ஜெய்ப்பூரில் ந டைபெற்று வரும் சர்வதேச இலக்கிய விழாவில் , கலந்து கொள்ள மறுத்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து  கொண்ட இலக்கியவாதிகள் ஹரி குன்ஸுரு மற் றும் அமிதவ் குமார் ஆகியோர் சல்மான் ருஷ்டிக் கு வலுத்த
எதிர்ப்பை கண்டிக்கும் விதமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், ருஷ்டியின் சாத்தான் கவிதைகள் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை வாசிக்க தொடங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது.

சாத்தானின் கவிதைகள் புத்தம் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி 1997ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. இந்நிலையில் அவையில் முதலில் பேச வந்த குன்ஸுரு, 'சப்பாத்துக்களை எறிபவர்களுக்கும், எதிர்ப்பு தெரிவிப்பவரளுக்கும் எதிராக நான் சல்மானின் கவிதைகளை படிப்பதாக' கூறி அப்புத்தகத்தின் சில பகுதிகளை வாசிக்க தொடங்கினார்.  ஏற்பாட்டாளர்கள், அடுத்து பேச அழைக்கப்பட்ட அமிதவ் குமாரை இப்புத்தகத்தை படிக்க வேண்டாம் என கோரினர். ஆனால் அவரும் அப்புத்தகத்தையே படித்தார். இதனால் நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே இது கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இருவருக்கும் டுவிட்டரில் பாராட்டியுள்ளார் சல்மான் ருஷ்டி.

இந்தியாவில் பிறந்த பிரித்தானியரான சல்மான் ருஷ்டி பிரபல ஆங்கில நாவலாசிரியாக வலம் வருகிறார். அவருக்கு புகழ்பெற்ற புக்கர் விருதும் கிடைத்துள்ளது. எனினும் 1988 இல் இவர் எழுதிய சாத்தானின் கவிதைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டியை கொலை செய்ய வேண்டுமென ஒரு ஃபத்வா வெளியிட்டிருந்தார். இதையடுத்து ருஷ்டி லண்டனில் புகலிடம் கோரியிருந்தார்.

இச்செய்தியை அனைவருடனும் பகிருங்கள்!

0 கருத்துகள்: