ஐந்து மாநில சட்டசபை தேர்தலையொட்டி, அன்னா ஹசாரே குழுவினர் டோராடூனில்பொதுக்கூட்டமொ$ன்றில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அக்குழு வினர் மீது ஒருவர் செருப்பு வீசி தாக்குதல் நடத்த மு யற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹசாரே குழுவை சேர்ந்த அர்விந்த் கேஜ்ரிவால், மனீ ஷ் சிஷோடியோ, கிரண் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்ட அக்கூட்டத்தில், கிஷன் லால் என்பவர், திடீரென தனது
செருப்புக்களை கழற்றி வீசினார். ஷூக்கள் அவர்கள் மீது படவில்லை எனவும் இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. தாக்குதல் நடத்தியவரை கைது செய்த பொலிஸார், அவர் டேராடூனை சேர்ந்த கடை உரிமையாளர் என தெரிவித்துள்ளனர். வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறிய காங்கிரச் அரசை கண்டித்தும், ஊழலுக்கு எதிராக மக்களை வாக்களிக்க கோரியும், ஹசாரே குழுவினர் சட்டசபை தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.முன்னதாக ஒரு முறை மத்திய வேளாண்மை துறை அமைச்சர் சரத் பவார் சீக்கியர் ஒருவரினால் கன்னத்தில் அறை வாங்கிய சமயம், 'என்ன சரத்பவார் கன்னத்தில் அறைவாங்கினாரா? ஒரு அடியா விழுந்தது? என ஹசாரே கேலி செய்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக