பாரிஸ்:ஈரானின் அணுசக்தி திட்டத்தை தகர்க்கவும், அணு விஞ்ஞானிகளை படுகொலைச் செய்யவும் ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்டு ஈராக்கின் குர்திஸ்தானில் வசிக்கும் நபர்களை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாத் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈராக்கில் குர்துக்கள் சுயாட்சி புரியும் பிரதேசம் குர்திஸ்தான். இங்கு மொஸாதின்
ஏஜண்டுகள் நுழைந்துள்ளனர் என ஈராக்கின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரான்சு நாட்டு பத்திரிகையான ஃபிகரோ கூறுகிறது.ஈரானில் தற்போதைய அரசுக்கு எதிராக உள்ள குர்திஸ்தானில் வசிக்கும் ஈரான் குடிமக்களை மொஸாத் ரிக்ரூட் செய்துவருகிறது. அமெரிக்காவின் சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய ஈரான் வம்சாவழியை சார்ந்த அமெரிக்க குடிமகன் ஹிக்மதிக்கு கடந்த திங்கள் கிழமை ஈரான் புரட்சி நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது. ஆப்கானிலும், ஈராக்கிலும் அமெரிக்க ராணுவ மையத்தில் பயிற்சி பெற்ற நபர்தாம் ஹிக்மதி என்று ஈரான் குற்றம் சாட்டியது. ஆனால், இதனை அமெரிக்கா மறுத்துள்ளது.
கடந்த மே மாதம் கைதான 30 பேரில் 15 நபர்கள் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் உளவு வேலை புரிந்ததை ஒப்புக்கொண்டனர். முன்பு பாக்தாத் எல்லையை ஒட்டிய பிரதேசத்தில் இருந்து மூன்று அமெரிக்கர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் ஒரு பெண்ணும் அடங்குவார். மனித நேயத்தின் அடிப்படையில் அப்பெண்ணை ஈரான் விடுதலைச் செய்தது.
ஈரான் எதிர்பார்க்காத பல நிகழ்வுகளுக்கு இவ்வருடம் சாட்சியம் வகிக்கவேண்டிய சூழல் ஏற்படும் என இஸ்ரேல் ராணுவ தலைமை தளபதி லெஃப்டினண்ட் ஜெனரல் பென்னி காண்ட்ஸ் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக