தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.1.12

துபாயில் கொல்லப்பட்ட இளம்பெண் உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம்

துபாய், ஜன. 13-  இந்தியாவில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தஇ ளம் பெண் பாலா கவா(வயது 28). துபாயில் வசித்து வந்த அவர், கடந்த மாதம் அவருடைய வீட்டிலேயே கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். டிசம்பர் 15-ந் தேதி இந்த சம்பவம் நடந்தது. 25 நாட்கள் கடந்த நிலையில், ஷார்ஜா மருத்துவமனையிலேயே அந்த பெண்ணின் உடல் இன்னமும் வைக்கப்பட்டுள்ளது.பாலா கவா உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்து இந்துமுறைப்படி இறுதிச்சடங்குகள் நடத்த
உறவினர்கள் விரும்புகின்றனர். ஆனால், இந்தியாவுக்கு பாலா கவா உடலை கொண்டு வர முடியவில்லை. இதனால், இரட்டை சோகத்தில் மூழ்கி இருப்பதாக பாலா கவா உறவினர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும், ஐக்கிய அரபில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியையும் கோரி உள்ளனர்.

0 கருத்துகள்: