சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில் பிரான்ஸ் பத்திரிகையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.சிரியாவில் நடந்து வரும் வன்முறையில் இதுவரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக கருதப்படுகிறது.மேலும் சிரியாவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக ஐ.நா சபையும் குற்றம் சாட்டி உள்ளது.இந்நிலையில், மக்களின்
எண்ணத்தை படம் பிடிப்பதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்நத பத்திரிகையாளர் கில்லஸ் ஜேக்குயர் என்பவர் சிரியா பொதுமக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டறியும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது நடைபெற்ற வன்முறை தாக்குதலில் கில்லஸ் ஜேக்குயர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிரியா அரசு தெரிவித்தது.
சிரியாவின் உள்நாட்டு கலவரத்தில் வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக