தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.1.12

'நக்கீரன்' அடுத்த இதழின் அட்டையில் 'வருத்தம்' தெரிவிக்க வேண்டும் : நீதிமன்றம்


நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் மற்றும் இணை ஆசிரிய ர் காமராஜ் ஆகிய இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம்மு ன் ஜாமீன் வழங்கியுள்ளது.தமிழக முதல்வர் ஜெயலலிதா மா ட்டுக்கறி உண்பவர் எனும் தொணியில் நக்கீரன் இதழில் கட்டு ரை வெளியானதால், நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத் தப்பட்டதுடன் நக்கீரன் பிரசுர இதழ்களும் எரிக்கப்பட்டன. இந்நி லையில், நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் காமராஜ் மீது த மிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். 'எனது அனுமதியில்லாமல் இக்கட்டுரை
பிரசுரிக்கப்பட்டுள்ள து. எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் களங்கம் விளைவித்துள்ளது. மத சார்பிலும் நிந்தனை செய்துள்ளது' என அவர் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் கோபால் மற்றும் காமராஜ் ஆகியோர் தாம் கைதாகாமல் இருக்க உயர் நீதிமன்றில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது நக்கீரன் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், 'வெளியிடப்பட்ட கட்டுரை தவறாக இருக்கும் பட்சத்தில் மீண்டும் இது போன்ற செய்திகளை வெளியிட மாட்டோம்.

கடந்த 7ம் திகதி நக்கீரனில் வெளிவந்த செய்தி தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவிடாமலே, இன்று வெளியாகியுள்ள பதிப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றார்.

எனினும் அட்வகேட் ஜெனரல் குறுக்கிட்டு, ஜெயலலிதா தொடர்பான செய்தி அட்டைப்படத்திலேயே வந்திருப்பதால், வருத்தமும் அதே பக்கத்தில் வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து அடுத்த பதிப்பில் அட்டையில் வருத்தம் வெளியிடுமாறு தலைமை நீதிபதி இக்பால் உத்தரவிட்டதுடன், நக்கீரன், கோபால் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கினார்.

0 கருத்துகள்: