தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.1.12

சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது

சென்னை, ஜன. 5-  சென்னையில் சுற்றுலா பொருட்காட்சி யை அமைச்சர் கோகுல இந்திரா தொடங்கி வைத்தார்.செ ன்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி ஆண் டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை 60 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆ ண்டு மழை மற்றும் 'தானே' புயல் பாதிப்பு காரணமாக திட்டமிட்டப்படி பொருட்காட்சி அரங்கம் அமைக்கும்பணி யில் தாமதம் ஏற்பட்டது.


இருப்பினும் கடந்த சில நாட்களாக பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு நேற்று பொருட்காட்சி தொடங்கியது. பொருட்காட்சியின் முகப்பு தோற்றம் மாமல்லபுரம் சிற்ப கலையை சிறப்பிக்கும் வகையிலும், ஸ்ரீரங்கம் கோவில் போலவும் கலை நயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
பொருட்காட்சியில் மத்திய, மாநில அரசுத்துறைகள், நிறுவனங்களின் 40 அரங்குகளும், தனியார் கடைகள் 120-ம் இடம் பெற்றுள்ளன. இதில் குழந்தைகள் மற்றும் பெண்களை மகிழ்விக்கும் வகையில், 40 பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு கூடார அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பொருட்கள், துணிக்கடைகள், அழகு சாதன பொருட்கள் நிறைந்த கடைகள், துரித உணவக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கம் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஊட்டி மலை ரெயில், தாஜ்மஹால் உள்பட இந்தியாவில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களின் மாதிரிகள் இடம் பெற்றிருந்தது.
மேலும் தமிழக அரசின் ஒவ்வொரு துறையையும் சிறப்பிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்கள் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. ஒவ்வொரு நாளும் அண்ணா கலையரங்கத்தில் இரவு 7 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் தமிழ்நாடு ஓட்டல் சார்பாக தமிழகத்தின் தலைசிறந்த பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட உள்ளது.
பொருட்காட்சியை தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு மகிழலாம். விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் தினமும் சிறப்பு குழுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் டிக்கெட் உரியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
சுற்றுலா பொருட்காட்சியின தொடக்கவிழா நேற்று மாலை 5 மணிக்கு தீவுத்திடலில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் ஜெயக்கொடி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனர் சந்தோஷ்ராஜ் மிஸ்ரா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்களை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் கோகுல இந்திரா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுலா பொருட்காட்சி திடல் அமைப்பதற்காக ரூ.50 லட்சத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். இதை ஒவ்வொரு அரங்கம் அமைப்பதற்கு பிரித்து கொடுத்து இருக்கிறோம். சுற்றுலா பொருட்காட்சியை மக்கள் நாளை(இன்று) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இலவசமாக பார்க்கலாம்.
வெள்ளிக்கிழமை முதல் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பொருட்காட்சியை இந்த ஆண்டு அதிகமான மக்கள் கண்டு ரசிப்பார்கள் என்று நம்புகிறோம்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு செல்லும் மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
மாநகராட்சி அரங்கில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அரங்கில் ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம் ஆகியவை இலவசமாக செய்யப்படும். பொருட்காட்சி 70 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்: