உலகின் முதலாவது 3D (முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் ) கூடிய தொலைக்காட்சி அலைவரிசை (TV Channel) ஐ சோத னை முறையில் தொடக்கியுள்ளது சீனா.2012, ஜனவரி முத லாம் திகதி முதல் தொடக்கப்பட்ட இப்புதிய சேனல், இப்போ து பரீட்சார்த்தமாக (Trial Period) ஒளிபரப்படுகிறது. ஜனவரி 23ம் திகதி சீனா புத்தாண்டு விழா கொண்டாட்டம் ஆரம்பமா கவுள்ளதால் அந்நாளிலிருந்து உத்தியோகபூர்வமாகிறது.சீ ன மத்திய தொலைக்காட்சி
சேவையின் (CCTV) கட்டுப்பாட்டில் இச்சேவை இயங்கி வருகிறது. கலை நிகழ்ச்சிகள், கார்டூன்கள், விளையாட்டுக்கள் என தினமும் 4.30 மணித்தியாலங்கள் கால அளவு கொண்ட முப்பரிமாண நிகழ்ச்சிகள் தற்சமயம் இச்சேனலில் ஒளிபரப்படுகின்றன. லண்டனில் நடைபெறும் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் முழுவதையும் 3D யில் ஒளிபரப்புவதற்கு இப்போதே இச்சேனல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்த சேனலை பார்வையிடுவதற்கு என special glasses மற்றும் set-top box வாங்கிக்கொண்டால் போதும். வீட்டிலிருந்தே முப்பரிமாண தொழில்நுட்பத்தில் பார்வையிட முடியும்.
இந்த 3D சேனலில் ஒளிபரப்புவதற்காக முதன் முறையாக 3D தொழில்நுட்பத்துடன் படம்பிடிக்கப்பட்ட விளம்பரமும் வீடியோ கேம் நிறுவனமொன்றினால் வெளியிடப்படுள்ளது.
Beijing TV, Shanghai Media Group, Jiangsu TV, Tianjin TV மற்றும் Shenzhen TV ஆகிய தொலைக்காட்சிகள் இந்த 3D சேனலுக்கு பார்ட்னர்ஸாக பங்களிப்பு செலுத்துகின்றன.
சீன தொலைக்காட்சி தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்த 3D சேனல் முக்கிய மைல்கல்லாக திகழும் என சீன வானொலி மற்றும் தொலைக்காட்சி திரைப்பட நிர்வாக சபை தலைவர் Cai Fuchao தெரிவித்துள்ளார்.
இந்த 3D சேனலுக்கு ஏற்ற வகையில் சீனாவில் தயாரிக்கப்படவிருக்கும் புதிய வகை தொலைக்காட்சி பெட்டிகளை சுமார் 5,000 யுவான் (790 அமெரிக்க டாலர்கள்) க்கு வாங்க முடியுமாம்.

Photo : Ap
0 கருத்துகள்:
கருத்துரையிடுக