டெக்ரான், ஜன. 5- வளைகுடா பகுதியில் அமெரிக்க போ ர்க்கப்பல் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று ஈரான் ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஈரான் நாடு அணுகுண்டுகளை தயாரிப்பதாக குற்றம்சாட்டி அந்த நா டுமீது அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் பொருளா தார தடை விதித்துள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் ஈரான் அணுசக்தியை நாங்கள் மின்சார தயாரி ப்பு போன்ற ஆக்கபூர்வ திட்டங்க
ளுக்கே பயன்படுத்துகிறோம் என கூறுகிறது.
ளுக்கே பயன்படுத்துகிறோம் என கூறுகிறது.
இந்நிலையில் ஈரான் நாட்டு ராணுவம் வளைகுடாவில் உள்ள ஓமன் கடல் பகுதியில் போர் பயிற்சி ஒத்திகையை நடத்தி வருகிறது. இதில் கடற்படை நடத்திய 10 நாள் ஒத்திகை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது.
இந்த போர் ஒத்திகையின் போது ஈரான் போர்க்கப்பலில் இருந்து குறைந்த தூரம் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி சோதனை நடத்தியது. இதன் மூலம் ஈரான் தனது ராணுவ வலிமையை பெருக்கி கொண்டுள்ளது என்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டு ராணுவத்திற்கு சவால் விடும் அளவிற்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வளைகுடா பகுதியில் ஈரான் போர் ஒத்திகை நடத்துவதால் அமெரிக்க போர்க்கப்பல்கள் அவ்வழியாக செல்லவில்லை. இதற்கிடையில் அமெரிக்க போர்க்கப்பல் திரும்பவும் நுழையக்கூடாது. மீறினால் எதிர் நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ஈரான் ராணுவ தலைமை தளபதி அதோல்லா சாலேகி கூறியதாவது:-
ஓமன் கடல் பகுதியில் எங்கள் பயிற்சி நடைபெறுகிறது. எனவே எதிரிகளின் (அமெரிக்க) போர்க்கப்பல் செல்லக்கூடாது. இந்த எச்சரிக்கை ஏற்கனவே ஒருமுறை விடுக்கப்பட்டு விட்டது. மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் அமெரிக்கா போர்க்கப்பல் எது என்பதையோ, ஈரான் எந்த விதமான எதிர் நடவடிக்கை எடுக்க போகிறது என்பதையோ அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் பக்ரைனில் முகாமிட்டுள்ள அமெரிக்காவின் 15-வது கடற்படை கருத்து தெரிவிக்கையில், வளைகுடா பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கப்பல் செல்ல அனுமதிக்க மாட்டோம் என விளக்கம் அளித்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக