தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.1.12

இந்திய வர்த்தகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் : சீன தூதுவர் வாக்குறுதி


இச்சம்பவத்தை கண்டித்து சீனாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது
இந்தியா வர்த்தகர்கள், சீனாவின் ஷாங்காய் நகரில் தாக்கப்பட்டது தொடரில், சந்தேகத்தின்பெயரில் ஐந்து நபர்களை தற்போது கைது செய்துள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில்
சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பதாகவும், சீன தூதுவர் ஷாங் யான் தெரிவித்துள்ளார்.

டில்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும், கிழக்காசிய வெளிவிவகார தூதரக அதிகாரி கௌதம் பாம்பவ்லே ஆகியோரை சந்தித்த பின்னர், சீன தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஷாங்காய் மாகாணத்தின் மிகப்பெரிய வர்த்தக பிரதேசமாக விளங்கும் இவு பகுதியில் சீன வர்த்தகர்கள் ஒன்றிணைந்து, தமக்கு நிலுவை தொகை அளிக்காது ஏமாற்றி வந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு இந்தியர்களை பிணை கைதிகளாக சிறைபிடித்தனர்.

இவர்களை விடுவிக்க அங்கு சென்ற இந்திய தூதரக அதிகாரி பாலச்சந்திரன், நீதிமன்றம் வரை சென்று வாதாடி அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார்.. நிலுவை தொகை அளிக்க வேண்டிய உரிமையாளர் தலைமறைவாகிவிட்ட நிலையில் பிணை கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட இரு இந்தியர்களையும் விடுவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த வர்த்தகர்கள், நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த தூதுவர் பாலச்சந்திரனை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் அவர் மயங்கி கீழே வீழ்ந்து மயங்கினார். மேலும் குறித்த இரு இந்திய வர்த்தகர்களும் தாக்கப்பட்டனர்.

கடந்த டிசம்பர் 31ம் திகதி நடைபெற்ற இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.  சீனாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் பெஜ்ஜிங் மற்றும் ஷாங்காயில் உள்ள சீன நாட்டு அதிகாரிகளிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இவு வர்த்தக மையத்தில் வியாபாரம் செய்ய வேண்டாம் என இந்திய வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் சீன தூதுவர் விடுத்துள்ள செய்தியில், இந்திய வர்த்தகர்கள் மற்றும் தூதரக அதிகாரி தாக்கப்பட்டது குறித்து சட்டரீடியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.  சீனாவில் இந்திய தூதரக அதிகாரிகள் எங்கு வேண்டுமென்றாலும் சென்று வரலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆனால் இபு நகரில் இருந்த இந்திய வர்த்தகர்கள் தற்போது ஷாங்காய் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அரச கட்டுப்பாட்டு ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: