இஸ்ரேல் மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை படுகொலை செய்வதுதான் வழி என்று அமெரிக்க பத்திரிகை ஒன்றில் கட்டுரை வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அட்லான்டா நகரில் வசிக்கும் யூதர்களுக்காக வெளிவரும் பத்திரிகை ‘ஜூயிஷ் டைம்ஸ்’.இதில் ஆண்ட்ரூ அட்லர் என்ற யூத எழுத்தாளர் ஒரு கட்டுரை
எழுதியிருந்தார். ‘‘இஸ்ரேல் மக்களை காப்பாற்ற 3 வழிகள் இருக்கின்றன. ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் இயக்கத்தை அழிக்க வேண்டும். ஈரானில் உள்ள அணுசக்தி மையங்களை தகர்க்க வேண்டும். அமெரிக்க அதிபர் ஒபாமாவை இஸ்ரேல் படுகொலை செய்ய வேண்டும்’’ என்று அவர் எழுதியிருந்தார். இது பெரும் பரபரப்பு, சர்ச்சையை ஏற்படுத்தியது.பல தரப்பிலும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, கட்டுரை எழுதிய ஆண்ட்ரூ அட்லர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதெல்லாம் ஒரு தீர்வா என்று வாசகர்களிடம் ஒருவித எரிச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் எழுதினேன். வன்முறை மற்றும் ஒபாமா எதிர்ப்பை தூண்ட வேண்டும் என்பது நோக்கமல்ல என்று அவர் கூறியுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக