தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.1.12

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் அறிவிப்பு


ஈரான் தொடர்ந்து அணுஆயுதங்களை தயாரித்து குவித்து வருவதாக அமெரிக்கா உட்பட மேற் கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஈரான் மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஆனால், ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்காக மட்டுமே அணுசக்தி உற்பத்தி செய்யப்படுவதாக ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.இந்நிலையில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான  இஸ்ரேல்,  அணு உற்பத்தியை ஈரான்  உடனடியாக நிறுத்த தவறினால்  அந்நாடு மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அமெரிக்காவை வலியுறுத்திள்ளது.

ஈரானின் அணு உற்பத்தி  நிலையங்கள் மீது தாக்குதலை தொடங்க அமெரிக்காவுக்கு 12 மணி நேர கெடுவை இஸ்ரேல் நேற்று விடுத்தது. அவ்வாறு நடைபெறவில்லை எனில் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளது.
அமெரிக்க முப்படை இணை தலைவரான ஜெனரல் மார்ட்டினிடம் இஸ்ரேல் ராணுவ அமைச் சர் எகுத் பாரக் இதை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
.
ஈரானின் அணு உற்பத்தி நிலையங்களை குறி வைத்து, தாக்குதல் நடத்தி அழிக்கப் போவதாக இஸ்ரேல் திடீரென அறிவித்திருப்பதின் காரணமாக அமெரிக்கா உட்பட உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் மீண்டும் வெற்றி பெற அமெரிக்க வாழ் இஸ்ரேலியர் களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்: