அமெரிக்க டி.வி.யான 'என்.பி.சி.'யின் பிரபல நிகழ்ச்சி யான 'தி டுநைட் ஷோ'வில், பஞ்சாப் மாநிலம் அமிர்த சரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித தலமானபொ ற்கோவிலின் படம் ஒளிபரப்பானது. அப்போது அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜே லினோ, "அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி கோடை காலத்தில் த ங்கி ஓய்வு
எடுப்பதற்கு பொருத்தமான இடம்" என்று, பொற்கோவில் பற்றி கருத்து தெரிவித்து இருந்தார்.அவருடைய இந்த கருத்துக்கு அமெரிக்காவில் கணிசமாக வசிக்கும் சீக்கியர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறை மந்திரி வயலார் ரவியிடம், அங்குள்ள சீக்கிய சமுதாயத்தினர் புகார் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, பொற்கோவில் பற்றிய அந்த டி.வி.யின் விமர்சனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த வயலார் ரவி, இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்வு குறித்து அமெரிக்க அரசுடன் தொடர்பு கொண்டு பேசி உரிய நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் நிருபமா ராவுக்கு அவர் உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக