தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.12.11

ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் செயலாளாராக பணிபுரிந்தவர் அன்னா ஹசாரே : திக் விஜய்சிங்


அன்னா ஹசாரே மேல் கடுமையாக தாக்குதல் தொடுக்கும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திக் விஜய் சிங் இன்று ட்விட்டரில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் நானாஜி தேஷ்முக்கிடம் செயலாளராக பணியாற்றியவர் அன்னா ஹசாரே என்ற செய்தி ஹிந்தி பத்திரிகையில் வெளிவந்துள்ளதை சுட்டி காட்டி மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார்.இன்று ட்விட்டரில் இது குறித்து எழுதியுள்ள திக் விஜய் சிங் ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக்கிடம் செயலாளாராக 1983ல் பணியாற்றியுள்ளதோடு சங் பரிவார நடவடிக்கைகளிலும் அன்னா ஈடுபட்டுள்ளதை நய் துனியா என்ற பத்திரிகை தன் முதல் பக்கத்தில் வெளியிட்டிருப்பதை சுட்டி காட்டியுள்ளார்.

தான் அன்னா ஆர்.எஸ்.எஸ் ஆள் என்று சொன்ன போதெல்லாம் அன்னாவும் அவர் குழுவும் அதை மறுத்ததாகவும் தற்போது புகைப்படங்களுடன் ஆதாரம் வெளியாகியுள்ளதாகவும் தன் கூற்று சரி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

மேலும் அன்னாவுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்த திக்விஜய் சிங் நிறைய நிதி கிடைக்கும் என்பதால் நிதிக்காகவே உண்ணாவிரதத்தை தில்லியிலிருந்து அன்னா மும்பைக்கு மாற்றியதாகவும் குளிருக்காக அல்ல (BECAUSE OF FUND NOT THUND) என்றும் சாடியுள்ளார்.

திக்விஜய்சிங்கின் அறிக்கைகள் தங்கள் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி என்றும் தங்கள் போராட்டத்தை காங்கிரஸ் அரசியலாக்குவதாகவும் கிரண்பேடியும் கேஜரிவாலும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: