இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி திருமண சட்டம் கொண்டுவர மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.இந்திய மாநிலமான பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீக்கிய மக்களின் நீண்ட கால கோரிக்கையாக விளங்கும் சீக்கியர்களுக்கு என தனி திருமணச்சட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக மத்திய அரசு
அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதுவரை சீக்கியர்களுக்கு இந்து திருமண சட்டம் பின்பற்றப்பட்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த பின்னர், புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்த பின்னர் சட்டமாக நடைமுறைபடுத்தப்படும். இந்த சட்டம் குறித்து பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அம்ரீந்தர் சிங் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள், மதத்தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
சீக்கிய திருமணச் சட்டத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக