தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.12.11

பிரேசில்: போலி மார்பகத்தில் போதைப் பொருளை மறைத்து வைத்த மாடல் அழகி கைது.

பிரேசிலிலிருந்து ரோம் நகருக்கு வந்த விமானத்தில் பயணித்த  ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 33 வயது மாடல் அழகி, தனது மார்ப கத்திற்குள் 2.5 கிலோ கொகைன் போதைப் பொருளை மறைத்து எடுத்து வந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அந்த போதைப் பொ ருளைப் பறிமுதல் செய்து அழகியையும் கைது செய்தனர் அவர து பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில் லை. எம்எப்எம் என்று மட்டும் அடையாளம் கூறப்பட்ட அப்பெண் பிரேசிலின் சாவோ பாலோ நகரிலிருந்து விமானம் ஏறியுள்ளார்.
ரோம் நகரின் லியானார்டோ டாவின்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது அவரைப் பார்த்த அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.

காரணம், வழக்கமாக பெண்களுக்கு இருப்பதை விட மிகப் பெரிய சைஸில் அவரது மார்பகங்கள் இருந்ததே. அதேபோல அந்தப் பெண்ணின் பின்புறம் வழக்கத்தை விட மிகப் பெரிதாக எடுப்பாக இருந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட அழைத்துச் சென்றனர். பெண் அதிகாரிகளை வைத்து சோதனையிட்டபோது அவர் தனது இயற்கை மார்பகத்திற்கு மேலே செயற்கையாக மார்பகத்தை செட்டப் செய்து அதற்குள் கொகைனை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

அதேபோல தனது பின்புறத்தையும் செயற்கையாக பெரிதாக்கி அதற்குள்ளும் கொகைனை வைத்திருந்தார் அப்பெண்.

இதையடுத்து கொகைனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அப்பெண்ணையும் கைது செய்தனர்.

0 கருத்துகள்: