அன்னா ஹசாரேயை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாமா என்று கூறுவதா?ஊழலுக்கு எதிராக வலுவான ஜனலோக்பால் சட்டம் கொண்டுவர போராடிவரும் அன்னா ஹசாரேயை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாமா என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இதை அன்னா ஹசாரே குழுவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜக கட்சியும் கடுமையாக எதிர்த்திருந்தன.இந்நிலையில், டெல்லியிலிருந்து வெளியாகும் ஒரு இந்தி ‘நய் துன்யா’ பத்திரிகை, அன்னா
ஹசாரேவுக்குஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பு உண்டு என்று நேற்று ஒரு செய்தி வெளியிட்டது.
ஹசாரேவுக்குஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பு உண்டு என்று நேற்று ஒரு செய்தி வெளியிட்டது.
அச்செய்தியில், "ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் உடன் அன்னா ஹசாரேவுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. அவரை அன்னா ஹசாரே பலமுறை சந்தித்து உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அவருடன் பல நிகழ்ச்சிகளில் அன்னா ஹசாரே கலந்து கொண்டிருக்கிறார். அவரது தலைமையின் கீழ் அன்னா ஹசாரே வேலை செய்து இருக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு ஆதாரமாக, ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் நானாஜி தேஷ் முக் உடன் அன்னா ஹசாரே இருக்கும் படத்தையும் அந்தப் பத்திரிகை பிரசுரித்து இருந்தது.
இதைப் பார்த்த காங்கிரஸ் கட்சி, அன்னா ஹசாரேயை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாமா என்று மீண்டும் குற்றம் சாட்டியது. மத்திய மந்திரி பெனி பிரசாத் வர்மா, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் ஆகியோர், "அன்னா ஹசாரே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மாமா என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு ஆதாரமாக பத்திரிகை செய்தி வெளியாகி உள்ளது" என்று குற்றம் சாட்டினர்.
மேலும், "1983-ம் ஆண்டு நானாஜி தேஷ்முக் ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்தபோது, அன்னா ஹசாரே செயலாளராக பணியாற்றி உள்ளார். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுடன் பயிற்சியும் எடுத்து உள்ளார்" என்று திக்விஜய் சிங் தனது டுவிட்டர் கணக்கிலும் எழுதினார்.
இன்னொரு காங்கிரஸ் தலைவரான ரஷீத் ஆல்வி "அன்னா ஹசாரே தனது கொள்கை, நம்பிக்கை குறித்து தெளிவாக விளக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக