தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.11.11

சிரியாவை கைவிட்டு அரபுலீக் விஷேட கூட்டம்


தமது நாட்டை அரபுலீக்கில் இருந்து விலத்தியதற்கு சிரியா கடும் கண்டனம் தெரிவித்து உடனடியாக அவசரக்கூட்டம் ஒன்றை நடாத்த வேண்டுமெனக் கேட்டிருந்தது. ஆனால் சிரியாவை இணைத்துக் கொள்ளாமலேயே இன்று அரபுலீக் கூடுகிறது. அடுத்த கட்டமாக சிரியாவை என்ன செய்யலாம் என்ற கேள்விக்கான பதிலைக் காண இன்றய சந்திப்பு முயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபுலீக்கில் உள்ள சில நாடுகள் சிரியாவுடன் உறவு வைத்துள்ளன,
அவை மட்டும் சிரிய பிரதிநிதியை சகட்டுமேனிக்கு வரவழைத்துள்ளன. ஆனால் அரபுலீக் உத்தியோகபூர்வ அழைப்பு கொடுக்கவில்லை. சிரியா வைத்தால் குடுமி வழித்தால் மொட்டை என்ற போக்குடைய நாடு. ஓரிடத்தில் சிறிய சீர்திருத்தம் செய்தாலே மற்றய இடங்கள் எல்லாம் இடிந்து கொட்டுப்பட்டுவிடும். ஆகவேதான் சிரியப்படைகளை பின்வாங்கச் செய்ய முடியாமலுள்ளது. மேலைநாடுகளதும், அரபு லீக்கினதும் கருத்துக்களைக் கேட்டால் சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டின் சரித்திரம் முடிந்துவிடும். சிறீலங்கா போன்ற உணர்ச்சிகரமான அரசியல் கொண்ட நாடாக இருப்பது சிரியாவுக்கு இதுவரை பாதுகாப்பை கொடுத்தது. இன்று ஏற்பட்டுள்ள உலக மாற்றத்தில் சிரியா, சிறீலங்கா போன்ற நாடுகள் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் உள்ளன.

0 கருத்துகள்: