கார்களை கட்டிடங்களுக்குள்ளும், வெளியிலும் நிறுத்தி வைத்து விற்பனை செய்யும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ஜேர்மனியின் வூல்ப்ஸ்பேக் நகரத்தில் உள்ள வொக்ஸ்வகன் விற்பனை நிறுவனம். விளையாட்டு சமான்கள் அடுக்கி வைக்கப்படுவதுபோல கார்களை வட்டவடிவமாக அடுக்கியுள்ளார்கள். நுகர்வோர் கணினியில் பார்த்துவிட்டு
அடையாளம் காட்ட, அக்கணமே தானியங்கி மூலம் கார் உரிய இடம் வந்து சேரும். தற்போது டென்மார்க்கில் உள்ள மருந்துக் கடைகளில் இதுபோலவே தானியங்கிகள் மூலமே மருந்து பொருட்கள் எடுக்கப்படுவது கவனிக்கத்தக்கது. இப்படிச் செய்வதானது பாதுகாப்பு, இலகு, குறைந்த இடத்தில் கூடுதல் கார்களை வைத்திருத்தல் என்று பல வகையிலும் வசதியானது. நாட்டில் மக்கள் போரின்றி வாழ்ந்தால் இதுபோன்ற நவீன சிந்தனைகள் பெருகுமன்றோ..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக