தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.11.11

12 கடலோர காவல் நிலையங்களுக்கு சிறப்பு வாகனங்கள்: ஜெயலலிதா உத்தரவு


தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உள்ள 12 கடலோர காவல் நிலையங்களுக்கும் சிறப்பு வாகனங்களை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய் செலவாகும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் திருவள்ளு‘ர் மாவட்டம்
முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை 1076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளை பாதுகாக்கும் வண்ணம் 1994 ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் கடலோர காவல்படை ஏற்படுத்தப்பட்டது. இந்த கடலோர காவல்படையானது, கடற்படை, உள்ளூர் காவல்துறை, மீன்வளத்துறை, சுங்கத்துறை, வருவாய்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது.
கடற்கரையோரம் நடைபெறும் குற்றங்களை தடுப்பது கடலோர காவல்படையின் பணியாகும். பெரும்பாலான கடற்கரைகளுக்கு செல்ல சரியான சாலை வசதியில்லை. மணலில் செல்லக்கூடிய வாகனங்களும் கடலோர காவல்படையிடம் இல்லை. எனவே இதனைக் கருத்தில் கொண்டு மணற்பாங்கான கடற்பகுதிகளைப் பாதுகாக்க, கடலோர காவல்படைக்கு அனைத்து வகையான பாதைகளிலும் துரிதமாக செல்லக்கூடிய சிறப்பு வாகனங்களை கடலோர பாதுகாப்புப் படையை சேர்ந்த 12 காவல் நிலையங்களுக்கும், தலா ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு ஜீப் அளிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதனால், அரசுக்கு 1 கோடியே 56 லட்சம் ரூபாய் தொடரா செலவினமும், 48 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய், ஆண்டொன்றுக்கு தொடர் செலவினமும் ஏற்படும் என்று தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறபட்டு உள்ளது.

0 கருத்துகள்: