இந்தியாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்று பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மாலத்தீவில் நடைபெற்று வரும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த அவரிடம், இந்தியாவுக்கு நட்பு நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள
குழப்பம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது,இந்தியாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.
நட்பு நாடு என்று இந்தியாவுக்கு சான்று வழங்கப்படும் என்று சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இது தவறு.
இரு நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் நட்பு நாடு என்று அழைக்கப்படுகிறது.
மேலும் அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் முயன்று வருகிறது. குறிப்பாக இந்தியாவுடனான அமைதி பேச்சு தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக