கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற
போர்க்குற்றங்கள் மற்றும் மனுத உரிமை மீறல்கள் தொடர்பில், 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தை சேனல் 4 தயாரித்திருந்தது.
ஜெனிவாவில் ஐ.நாவிலும், ஐரோப்பிய பாராளுமன்றத்திலும்
மட்டுமல்லாது, சர்வதேச நாடுகள்
பலவற்றிலும் இந்த ஆவணப்படம், திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் சில விமர்சனங்களையும் சந்தித்திருந்தது.ஜெனிவாவில் ஐ.நாவிலும், ஐரோப்பிய பாராளுமன்றத்திலும்
மட்டுமல்லாது, சர்வதேச நாடுகள்
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக அடுத்த பாகத்தை தயாரிக்குமாறு சேனல் 4 தொலைக்காட்சியின் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான தலைவர் டொரத்தி பிரைன், ITN - பிரித்தானிய சுதந்திர தொலைக்காசி செய்தி சேவையிடம் கேட்டுள்ளார்.
மேலும் அடுத்த வருடத்தில் இந்த ஆவணப்படத்தின் தொடர்ச்சி வெளியிடுவற்கு இருப்பதாகவும் தற்போது இதற்காக பணிபுரிவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன் எனவும் சேனல் 4 இன் பிரபல ஊடகவியலாளர் ஜோன் ஸ்னோ தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள், இந்த போர்க்குற்றங்களுக்கு எவ்வளவு உடந்தையாக இருக்கிறார்கள் என்பதனை இப்புதிய ஆவணப்படம் உலகுக்கு காட்டும் எனவும், முதல் படத்தை போலவே அதிர்ச்சி தரக்கூடியதாகவும், சில கற்றுக்கொள்ளக்கூடிய தகவல்களை கொண்டிருப்பதாகவும் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் (Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished) எனும் தலைப்பில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தை ஊடவியலாளர் ஜோன் ஸ்னோ தொகுத்து வழங்கவுள்ளதுடன், கெலும் மெக்ரே நெறியாள்கை செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக