கடந்த வாரம் இஸ்ரேலிய அதிபர் சீமொன் பெரஸ் தமது நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடாத்தும் காலம் நெருங்குவதாக மிரட்டல் விடுத்திருந்தார். அவருடைய மிரட்டலுக்கு பதிலடி இப்போது ரஸ்யாவில் இருந்து கிடைத்துள்ளது. ஈரானின் புஸார் நகரம் உட்பட பல இடங்களில் ஜப்பானில் உள்ள புக்குசீமா அணுசக்தி உலைகள் போன்ற பல அணுசக்தி மையங்களை ரஸ்யா அமைக்க இருக்கிறது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்
கடந்த புதன் கிழமை வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி மேலை நாடுகளுக்கு பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நாவின் சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு மையம்
இந்த அறிவித்தலை உறுதி செய்துள்ளது. ரஸ்யாவின் இந்த ஆதரவு அடுத்த கட்டமாக ஈரான் அணு குண்டுகளை உருவாக்க பேருதவியாக அமையப் போகிறது.
கடந்த புதன் கிழமை வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி மேலை நாடுகளுக்கு பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நாவின் சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு மையம்
இந்த அறிவித்தலை உறுதி செய்துள்ளது. ரஸ்யாவின் இந்த ஆதரவு அடுத்த கட்டமாக ஈரான் அணு குண்டுகளை உருவாக்க பேருதவியாக அமையப் போகிறது.
ரஸ்யாவின் அடுத்த அதிபர் பதவிக்கு தேர்தலில் போட்டியிடவுள்ளார் தற்போதய பிரதமர் விளாடிமிர் புற்றின். இவர் தன்னுடைய சாகசத்தன்மையை வெளிக்காட்ட இந்த நாடகத்தை ஆரம்பித்துள்ளாரா இல்லை மேலை நாடுகளுக்கு எதிராக அடுத்த கட்ட அணியை அவர் தயாரிக்க ஆரம்பித்துவிட்டாரா என்பதை சிறிது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பாலஸ்தீனத்தில் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர இயலாதவாறு பின்னணியில் தொழிற்பட்ட பெரும்பாலான நாடுகள் தகர்க்கப்பட்டுவிட்டன. ஆனால் அதில் முக்கிய பாத்திரம் வகித்துவரும் ஈரான் இன்னமும் தாக்குதலுக்கு இலக்காகவில்லை. பாலஸ்தீனர்களை மேலை நாடுகள் ஏமாற்றி காதில் பூ சுற்றினால் ஈரானின் கையில் அணு குண்டு இருக்கும் காட்சியை அவர்கள் காண நேரிடும் என்ற எச்சரிக்கை இதில் இருக்கிறது. மேலும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பி சாதனை புரியப்போவதாக அறிவித்த ரஸ்யா சீனாவை முந்திச் செல்ல வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆகவே ஏதோ ஓர் இடத்தில் ரஸ்யா வெளிப்படையாக நிற்க வேண்டிய காலம் நெருங்கியிருக்கிறது. இதுவரை மதில் மேல் பூனையாக இருந்து அனைத்து நண்பர்களையும் இழந்து நிற்கும் ரஸ்யாவின் கடைசிக்குரல் ஈரானின் அணுசக்தி உலை என்ற வடிவத்தில் அரங்கேறியிருக்கிறது.
ஏற்கெவே இஸ்ரேலிய விமானங்களை சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பொருந்திய ஏவுகணைகளை ரஸ்யா ஈரானுக்கு வழங்கிவிட்டது. அமெரிக்காவின் பற்றியாற்றிக் ஏவுகணை சுடு கலங்களைப் போல வல்லமை பொருந்திய ஏவுகணை எதிர்ப்புப் பீரங்கிகள் ஈரானிடமும் இருப்பது கவனிக்கத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக