பீஜிங், நவ. 12- சீனாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 4 லட்சம் வெப் லிங்குகளை சீன அரசு தடை செய்துள்ளது.சீனாவில் செயல்பட்டு வரும் இணையதளங்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும் அவைகளின் செயல்பாடுகள் அனைத்தும் அரசங்காத்தின் இணைய தள கட்டுப்பாட்டு வாரியம் கட்டுபடுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த
ஆண்டு ஜூன் மாதம் முதல் சுமார் 4 லட்சம் இணைய தள இணைப்புகளை சீன அரசாங்கத்திடம் அனுமதி பெறாமல் லிங்குகள் எனப்படும் இணைய தள இணைப்புகள் வழங்கி வந்ததை அரசு கண்டறிந்தது. இதனையடுத்து அனைத்து லிங்குகளையும் அதிரடியாக ரத்து செய்தது. மேலும் சட்ட விரோதமாக லிங்குகளை பெற்று தந்த சுமார் இரண்டாயிரத்து 400 இண்டெர்நெட் மையங்களுக்கு விளக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோடை காலத்தின் போது இணையதள லிங்குகளை நெறிமுறைப்படுத்த உத்தரவிட்ட பின்னரும் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 4 லட்சத்து 10 ஆயிரம் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த சுமார் 13 மில்லியன் ஆடியோ மற்றும் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக