தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.11.11

முதன் முறையாக புகுஷிமா அணு மின்நிலையத்தை பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி

ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்திற்கு முதன் முறையாக ஊடகவியலாளர்கள்
உட்செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம்  சுனாமி மற்றும் நிலநடுக்கத்தினால் கடுமையாக பாதிப்படைந்த புகுஷிமா அணு மின் நிலையம், அளவுக்கு மீறிய கதிர்வீச்சை கக்கத்தொடங்கியதால், பொதுமக்கள் அப்பகுதிக்குள் நுழைய
தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த அணு மின் நிலையத்தின் கதிர்வீச்சு தாக்கத்தை, தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும், கதிர்வீச்சு கசிவை கட்டுப்படுத்தி விட்டதாகவும் ஜப்பானிய அரசு தெரிவித்து வருகிறது. எனினும் இதை சர்வதேசம் நம்பத்தயாராக இல்லாததால், சர்வதேச ஊடகவியலாளர்களை நேரடியாக புகுஷிமா அணு மின் நிலையத்தினுள் உட்சென்று பார்வையிடுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஆடைகள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடவையும், சுமார் 3000 பணியாளர்கள்,  நுழைவாயில் கடமையில் ஈடுபட்டிருப்பதுடன், அணு மின் நிலையத்தினுல் உள்சென்று வருபவர்களுக்கு கதிர்வீச்சு தாக்கம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என தீவிர பரிசோதனை செய்யவுள்ளனர்.

இதற்கென, அருகில் உள்ள காற்பந்து பயிற்சி மையத்தை, பரிசோதனை மையமாக அரசு மாற்றியுள்ளது.  இந்த வருட இறுதிக்குள் பாதிப்படைந்த அணு மின் நிலைய பகுதிகள் அனைத்தும் முழுமையாக குளிர்விக்கப்பட்டு விடும் எனவும், மீள இந்த அணு மின் நிலைய செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இன்னமும் ஒரு 10 வருடங்கள் தேவைப்படும் எனவும் ஜப்பானிய அரசு தெரிவித்துள்ளது. 

0 கருத்துகள்: