தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.11.11

உலகின் மிக உயரமான கண்ணாடி பாலம் : நடந்து செல்ல யாருக்கு தைரியமுண்டு?


'நிச்சயமாக இந்த கண்ணாடி பாலம், பலவீனமான இதயம் உள்ளவர்களுக்காக செய்யப்பட்டதல்ல.' - என்கிறது மெயில் ஆன்லைன்.
சீனாவின், ஷாங்கியேஜி எனும் இடத்தில் உள்ள டியன்மென் மலைத்தொடரில் பாறைகளோடு ஒட்டியவாறு (Tianmen Mountain) கடல் மட்டத்திலிருந்து 4700 அடி உயரத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கிறது இந்த கண்ணாடி பாலம்.
200 அடி நீளமான இக்கண்ணாடி பாலம், யுன்மெங் ஃபேரி எனும் மறுமுனை உச்சிக்கு செல்கிறது.



இப்பாலத்தின் கீழ்ப்பகுதியும்,சுற்றிபாதுகாப்புக்காக கட்டப்பட்டிருக்கும் பகுதியும் முழுக்க முழுக்க கண்ணாடியினால் உருவாக்கப்பட்டது. பாதுகாப்பானது தான தெரிந்திருந்தும், பாலத்தில் கால் வைப்பவர்கள் நிம்மதியாக நடந்து செல்ல மாட்டார்கள். தப்பித்தவறி தலை குனிந்து கீழே பார்த்தால் விவகாரம் தான்.
போதாத குறையாக, துப்பரவு பணியாளர்கள் இந்த கண்ணாடி பாலத்தை எந்நேரமும் துடைத்து அடிக்கடி தூய்மைப்படுத்தியும் விடுகிறார்களாம். இந்த பாலம் அமைந்திருக்கும் மலைத்தொடருக்கு சூட்டப்பட்டிருக்கும் Tienmen என்ற பெயருக்கு சொர்க்கத்தை அடையும் நுழைவாயில் என்று அர்த்தமாம். செல்வதற்கு யார் தயாராக இருக்கிறீர்கள்?கண்ணாடி பாலம் கட்டப்பட முன்பு : வீடியோ

0 கருத்துகள்: