கராச்சி, நவ. 13- பாகிஸ்தானில் புதைக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் கதாப் மற்றும் ஷோரப் கோத் நகரங்கள் உள்ளன. அங்குள்ள இடுகாட்டில் 40 கல்லறைகள் இடிக்கப்பட்டு அவை தோண்டப்பட்டிருந்தன. தோண்டப் பட்டவைகளில் பெரும்பாலானவை
குழந்தைகளின் கல்லறையாகும். அதில் இருந்த உடல்கள் சிதைக்கப்பட்டிருந்தன. எனவே, அவை பரிசோதனை செய்யப்பட்டன.
அதில், புதைக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகள் மாயமாகி இருந்தது. அவற்றை யாரோ திருடிச் சென்றுள்ளனர். எதற்காக இந்த காரியத்தில் ஈடுபட்டனர் என தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த சிந்து மாகாண கவர்னர் இர்ரத் உல் எபரத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே கல்லறைகள் தோண்டப்பட்ட விவகாரம் அப்பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது. எனவே, ஏராளமானவர்கள் அங்கு திரண்டனர். உடல் உறுப்புகள் திருடப்பட்டவர்களின் ஆன்மாவுக்கு பிரார்த்தனை செய்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக