தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.11.11

உருகும் ஆர்டிக் கடல்.. 2015ல் ஐஸ் மொத்தமும் காலி!


லண்டன்: பூமியில் நிலவி வரும் பருவநிலை மாற்றத்தினால் மூன்று ஆண்டுகளுக்குள் ஆர்டிக் கடலில் உள்ள ஐஸ் மொத்தமும் உருகி தண்ணீராக மாறிவிடும் என்று கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறியுள்ளனர்.இதனால் ஆர்டிக் கடல் பகுதியில் வசிக்கும் துருவக் கரடிகளும் அழிந்து விடும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
2015க்குள் உருகும் ஐஸ்: 
பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்த பல்வேறு ஆய்வாளர்களும் ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் முழுவதும் உருகுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்றே குறிப்பிட்டுள்ளனர். ஆர்க்டிக் கடலில் உள்ள ஐஸ் கட்டிகள் 2030க்குள் முழுவதும் உருகும் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கமிட்டியும் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இதனிடையே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கடல் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ் பூமியின் வட துருவத்தில் உள்ள ஆர்க்டிக் கடல் குறித்து கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.
அவரது ஆய்வில் அந்தக் கடலின் ஐஸ் கட்டிகள் முழுவதும் மிக வேகமாக உருகி வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் 2030வரை இருக்காது. அவை நிச்சயம் 2015க்குள் உருகிவிடும் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆர்க்டிக் கடலை ஒட்டியுள்ள வடக்கு ரஷ்யா, கனடா, கிரீன்லாந்து உள்ளிட்ட 4 மில்லியன் சதுர கிலோமீட்டரை சுற்றியுள்ள நாடுகள் பாதிப்பிற்குள்ளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துருவக் கரடிகள் அழியும்:
ஆர்டிக் கடலின் ஐஸ் மொத்தமும் உருகிவிடும் பட்சத்தில் துருவக்கரடிகள் மொத்தமும் அழிந்து விடும் அபயாமும் உருவாகியுள்ளது என்றும் பேராசிரியர் வதம்ஸ் எச்சரித்துள்ளார்.

0 கருத்துகள்: