தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.10.11

உயிருடன் பிடிபட்ட கடாபி விசாரணையின்றி சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் விசராணை வேண்டும் ஐநா : (வீடியோ)


லிபிய முன்னாள் அதிபர் கடாபி,போராட்ட குழுவினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு,
விசாரணையின்றி, கொடூரமான தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் வெளியான வெளியான வீடியோ ஆதாரத்தின் படி, படுகாயங்களுடன் தாக்குதல் இடத்திலிருந்து மீட்கப்பட்ட கடாபி, ஜீப் வண்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு, சுற்றிவர துப்பாக்கிகளுடன் அங்கு கூடும் போராட்ட குழுவினரால், மிருகத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு
கொல்லப்பட்டுள்ளார் என என 'அல்பவபா' அரேபிய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சேர்த் நகரின் புரட்சிப்படை இராணுவ தளபதி மொஹ்மட் அல் லைத் ஏபி இணையத்தளத்துக்கு தெரிவிக்கையில், கடாபி ஜீப் வண்டியில் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், அப்போது போராட்ட குழுவினர் அந்த ஜீப் வண்டி மீது சராமாரியாக துப்பாக்கி தாக்குதல் நடத்திய போது ஜீப்பிலிருந்து வெளியே வந்த கடாபி ஒரு கையில் பிஸ்டலும் மறு கையில் கலஷ்னிகோவ் வகை ரீஃபிளும் வைத்திருந்ததாகவும், அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், தலையிலும், தோளிலும் குண்டு பாய்ந்து, ஸ்தளத்திலேயே உயிரிழந்தார் எனவும் தெரிவித்தார்.

மேலும் நேட்டோ படையின் குண்டு தாக்குதலால் தான் அவர் உயிரிழந்தார் என வெளிவந்த தகவலையும் முற்றாக மறுத்திருந்தார்.

இதேவேளை, கடாபியின் மகன் முடாஸாமும், சேர்த் நகர தாக்குதலில், தனது தந்தையுடனேயே கொல்லப்பட்டு விட்டதாகவும், மற்றுமொரு மகனான சைஃப் அல் இஸ்லாம், சேர்த் நகரிலிருந்து தப்பிச்செல்ல முனைந்த போது கைது செய்யப்பட்டார் எனவும் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

எனினும் ரோய்டர் செய்தி நிறுவனம் முன்னர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் முட்டாஸம் கடாபி, படுக்கை ஒன்றில் இரத்தம் தோய்ந்த நிலையில் சாய்ந்து கிடந்ததாக காட்சிகள் காண்பிக்கப்பட்டிருந்தன.

கடாபியின் கால்களில் காயமேற்பட்டிருப்பதால் அவர் அவசரமாக ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக முதன் முதலில் தகவல் வெளிவந்தது. பின்னர் படுகாயம் காரணமாக அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் அவர் உயிருடன் பிடிபட்டு போராட்ட குழுவினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால், இடைக்கால அரசுக்கு மனித உரிமை அமைப்புக்கள் மூலம் நெருக்கடி அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை கடாபி மரணமடைந்த நிலையில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டு ஆரம்பத்தில் வெளிவந்த புகைப்படங்களில் சில போலியானவை என புதிய சர்ச்சையும் அடிபடுகிறது. (வீடியோ அனைவருக்கும் உகந்ததல்ல, பலவீனமானவர்கள் தவிர்த்துவிடவும்)


0 கருத்துகள்: