தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.10.11

உயிர் போகும் நிலையில் கடாபி கூறிய இறுதி வார்த்தைகள்!


லிபியாவின் முன்னாள் அதிபர் மௌமர் கடாபியின் மரணம் தொடர்பில்
வெளிவந்துள்ள வீடியோ காட்சிகள், அவர் போராட்ட குழுவினரால்  தாக்கிக்கொல்லப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதால், இது தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.
சம்பவ
இடத்திலிருந்த போராட்ட குழுவினர் தமது கைத்தொலைபேசிகள் மூலம் பதிவு செய்த காட்சிகளை நேற்றிரவு அரேபிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அக்காட்சிகளின் படி, கடாபியை போராட்ட குழுவினர் உயிருடன் பிடித்த போது, 'எமக்கு அவர் உயிருடன் வேண்டும்' என போராட்ட குழுவில் ஒருவர் கூறுகிறார்.

'நீங்கள் செய்பவை இஸ்லாமிய விதிகளின் படி அனுமதிக்கப்படவில்லை. நீ என்ன செய்கிறாயோ அது இஸ்லாம் மதத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது' என கடாபி லிபிய மொழியில் மறுமொழி கூறுகிறார்.

அப்போது அங்கு ஒரு துப்பாக்கி சத்தம் கேட்கிறது. அது கடாபியின் தலைநோக்கி சுடப்பட்டதாக இருக்கலாம். 'Do you know right from wrong?' (தவறிலிருந்து சரியானது எது என உனக்கு தெரிகிறதா?) எனும் வார்த்தைகளை, கடாபி தனது நினைவலைகளை இழக்க முன் இறுதியாக கூறியுள்ளார்.  'நாயே வாயை மூடு' என போராட்ட குழுவினர் அதற்கு பதில் அளித்துள்ளனர்.

கடாபி உயிரிழந்ததும், போராட்ட காரர்கள் கடாபியின் உயிரற்ற உடலை, தெருவில் போட்டு சுழற்றியுள்ளனர். ஆடைகளை களைந்துள்ளனர். அவரது தலையில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது பின்னர், கார் ஒன்றில் கடாபியின் சடலம் மிஸ்ராட்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டு பழைய இறைச்சிக்கடை ஒன்றில் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வீடியோ, மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருப்பதாகவும், கடாபியின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், ஜெனீவாவில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் பேச்சாளர் ரூபெர்ட் கொல்வில் தெரிவித்துள்ளார்.

கடாபியின் எழுச்சியும், வீழ்ச்சியும் :  வரலாற்று குறிப்புக்கள்

ஒருவர் யுத்தத்தில் கொல்லப்படுவதற்கும், இவ்வாறு கைது செய்து கொலை செய்யப்படுவதற்கும், வித்தியாசமிருக்கிறது. இது முழுமையாக தடை செய்யப்பட்ட ஒரு சித்திரவதை கொலை முயற்சி ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடாபியின் சடலம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பரிசோதனை செய்யப்பட்டு உறுதிப்படுத்திய பின்னர், இஸ்லாமிய முறைப்படி புதைக்கப்படும் எனவும் இடைக்கால நிர்வாக அரசின் பிரதிநிதி மொஹ்மட் சாயேஹ் தெரிவித்துள்ளார்.

எனினும் இறுதிச்சடங்குகள் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை கடாபியின் மரணத்தின் பின்னர் திரிபொலி, சேர்த், பெங்காஸி நகர்களில் பொதுமக்கள் ஆரவாரத்துடன் தமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளதுடன், 'கடவுள் இருக்கிறார் என்பதை காட்டிவிட்டார்' என கோஷமெழுப்பி வருகின்றனர்.

கடாபி எழுச்சியும் வீழ்ச்சியும் - புகைப்பட பார்வை

0 கருத்துகள்: