தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.10.11

நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசியதாக கூறப்படும் வழக்கு வேறு கோர்ட்டுக்கு மாற்றம்


சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்கும் நீதிபதியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி சுகுணா உத்தரவிட்டார்.
காஞ்சீபுரம் கோயில் நிர்வாகி சங்கர்ராமன் கடந்த 2004-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் உட்பட பலர் மீது
குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் சாட்சி விசாரணை புதுச்சேரி செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜெயேந்திரரும், செசன்சு கோர்ட்டு நீதிபதியும் செல்போனில் பேரம் பேசியது போன்ற உரையாடல் அடங்கிய சி.டி. வெளியானது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பி.சுந்தரராஜன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி கே.சுகுணா, சங்கர்ராமன் கொலை வழக்கின் சாட்சி விசாரணைக்கு 8 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், அந்த சி.டி. பற்றி விசாரணை நடத்த ஐகோர்ட்டின் கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சி.டி.பற்றி விசாரணை நடத்தி அதன் அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு நீதிபதி சுகுணா நேற்று உத்தரவிட்டார்.

0 கருத்துகள்: