தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.10.11

கைதிகள் பட்டியலை வெளியிட்டது இஸ்ரேல்


பாலஸ்தீனம் – இஸ்ரேல் சமாதன பேச்சுக்கள் ஒருபுறம் நடைபெற மறுபுறம் இரு தரப்பிற்குமிடையோன கைதிகள் பரிமாற்றங்களும் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வதற்கான பொரும்பான்மை ஆதரவு இஸ்ரேலிய பாராளுமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுமார் 1000 கைதிகளின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இவர்களில் 450 பேர் முதல் கட்டமாக வெளிவரவுள்ளார்கள். இவர்கள் இஸ்ரேலிய நீதிமன்றில் நிறுத்தப்பட்டு, சட்ட முறைப்படி விடுதலை செய்யப்படுவார்கள். இவர்களில் 27 பெண்களும் அடங்குவார்கள். அதேவேளை பாலஸ்தீன தீவிரவாத அமைப்பான ஹமாஸ் கடந்த ஐந்து வருடங்களாக பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவரையும் விடுதலை செய்யவுள்ளது. இப்போது நடைபெறும் பேச்சுக்களில் இஸ்ரேல் மதி நுட்பமாக காய்களை நகர்த்துகிறது, அதற்கமைய ஹமாஸ் அமைப்பும் சாதுரியமாக செயற்படுவது கவனிக்கத்தக்கது.

0 கருத்துகள்: