ஸ்ரீநகர்:அன்னா ஹஸாரே காந்தியின் ஆடையான கதருக்கு அடியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் காக்கி அரைக்கால் சட்டையை அணிந்துள்ளார் என ஜம்மு-கஷ்மீர் விடுதலை முன்னணியின்(ஜெ.கெ.எல்.எஃப்) தலைவர் முஹம்மது யாஸீன் மாலிக் தெரிவித்துள்ளார்.
கஷ்மீரைக் குறித்து ஹஸாரேயின் அறிக்கை முறைகேடானதும், நேர்மையின் தடுமாற்றமும் ஆகும் என மாலிக் கூறினார்.
ஹஸாரேயை காந்தீயவாதி என கூறுபவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். 1998-ஆம் ஆண்டு கஷ்மீருக்கு வருகைத்தந்த ஹஸாரே எனது வீட்டிற்கு வருகைத் தந்தார். இங்கே நடைபெறும் மனித உரிமை மீறல்களை குறித்து உரையாடிய அவர் கஷ்மீரிகளின் அரசியல் உரிமைகள் புனர்நிர்மாணிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். ஆனால் ஹஸாரேயின் புதிய அறிக்கை ஆச்சரியமடையச் செய்கிறது. இவ்வாறு யாஸீன் மாலிக் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக