அன்னா ஹஸாரேயின் பிரச்சாரமும் இயக்கமும் பிராமணியத் தன்மை கொண்டவை என்று சமூக சேவகர் சுவாமி அக்னிவேஷ் கடுமையாக கருத்துத் தெரிவித்துள்ளார். 'காந்திய வழி' என்று சொல்லிக்கொண்டாலும் அதில் கொஞ்சமும் ஜனநாயகம் இல்லை என்றும் 'எதிர்க்குரல்'களை குழுவிலிருந்து வெளியே தள்ளி எறிகிறார்கள் என்றும் அக்னிவேஷ் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கும் தலித்களுக்கும் அன்னாவின் குழுவில் போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று தான் வாதிட்டதாகக் கூறும் அக்னிவேஷ், "ஆனால், அன்னாவின் குழுவுக்கும் R S S க்கும் உள்ள தொடர்பு நன்கு அறியக்கூடியதே" என்றும் சொன்னார்.
ஹிசார் தொகுதியில் காங்கிரசை எதிர்ப்பது போன்ற முக்கிய முடிவுகளை அன்னா அமைப்பின் மையக்குழு முடிவெடுக்கவில்லை என்று சொன்ன அக்னிவேஷ், "உண்மையில் எல்லா முடிவுகளையும் அன்னாவும் அர்விந்து (கேஜ்ரிவால்) ம் தான் எடுக்கிறார்கள். ஜனநாயகம் என்பதெல்லாம் அவர்களிடத்தில் சிறிதுமில்லை' என்றார். "ஜனநாயக அமைப்பில் அவர்களால் செயற்படமுடியாது"
"எல்லோரையும் சமமாகக் கருதும் போக்கு அன்னா குழுவினரிடம் இல்லை. பாருங்கள், அவர் உண்ணாவிரதமிருந்த ஜந்தர் மந்தரிலோ ராம்லீலா மைதானத்திலோ முஸ்லிம்களும் தலித்களும் காணப்படவேயில்லை" என்றார் அக்னிவேஷ். "அதனால் தான் இதனை பிராமணிய வாதம் என்கிறேன்"
"தன்னைச் சுற்றி துதிபாடும் ஒரு கூட்டத்தை விரும்பி வளர்த்துக்கொண்டிருக்கிறார் அன்னா ", அந்த அமைப்பில் தான் மட்டுமே இதைச் சுட்டிக்காட்டியதாகவும் சொன்னார். "இருந்தும் பிரயோசனமில்லை"

இதையெல்லாம் சுட்டுவதால் அவர்களுக்குத் தன்னைப் பிடிக்காமல் போயிற்று என்றார் சுவாமி அக்னிவேஷ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக