தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.10.11

சிரியாவுக்கு எதிராக உலக சமுதாயம் ஒன்றுபட வேண்டும்


சிரிய சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராகவும், அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா கொண்டுவரும் பொருளாதார தடைகளுக்கு எதிராகவும் உலக சமுதாயம் ஒன்று திரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்று டென்மார்க் வந்துள்ள ஐ.நா செயலர் பான் கி மூன் தொலைக்காட்சி சேவை 2 ற்கு அளித்த செவ்வியில் கேட்டுள்ளார். ஐ.நா பாதுகாப்பு சபையில் சிரியாவுக்கு எதிரான பொருளாதார தடை குறித்த பிரேரணைக்கு சீ
னா – ரஸ்யா இரண்டும் வீட்டோ செலுத்தி முட்டுக்கட்டை போட்டாலும் சிரியாவுக்கு எதிரான ஐ.நாவின் அடுத்த கட்ட பணிகள் தொடர்வதாக தெரிவித்தார். உலக நாடுகள் லிபிய சர்வாதிகாரி கேணல் கடாபியின் வீழ்ச்சிக்கு எப்படி ஒன்று திரண்டு ஆதரவு தந்தார்களோ அதுபோல சர்வாதிகாரி ஆஸாட்டுக்கு எதிராகவும் ஒன்று திரண்டு ஆதரவு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சிரிய அரசு பொது மக்கள் மீது தொடர் தாக்குதல் நடாத்தி இதுவரை 3000 பேரை கொன்றுள்ளது. எகிப்தில் கொஸ்னி முபாரக் தலைமையிலான இராணுவம் பொது மக்கள் மீது நடாத்திய அடாவடித்தனங்களையே சர்வாதிகாரி ஆஸாட்டும் செய்து வருவது கவனிக்கத்தக்கது. இதுபோல சிறீலங்காவிலும் ஒரு மாற்றம்வர உலக சமுதாயம் ஆதரவு கொடுக்க வேண்டுமென ஐ.நா செயலர் கோரி, சிறீலங்கா விவகாரத்தில் அவர் மீது விழுந்த கறையை போக்குவார் என்ற ஆவலும் உலக மன்றில் பல தமிழரிடையே இருப்பது கவனிக்கத்தக்கது.

0 கருத்துகள்: