புதுடெல்லி : டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் காலை 10.17க்கு பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடைபெற்றதில் 9 பேர் உயிரிழந்-துள்ளனர். டெல்லி உயர்நீதிமன்ற 5ம் நுழைவு வளாகத்தில் வெடித்த குண்டால் 45 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததாக வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குண்டுவெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கான காரணம் குறித்த தகவல் தெரியவில்லை. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்பு பணிகள் தீவிரம்!
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் போலீசார் தீவிரப் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்கிறது பதற்றம் - போலீஸ் குவிப்பு!
இந்தியாவின் முக்கிய இடமான டெல்லி உயர்நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குண்டுவெடிப்பிற்கான தடயங்களை சேகரிக்கும் பணியில் குண்டுவெடிப்பு நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் : ப.சிதம்பரம் அறிக்கை!
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த மக்களவையில் ப.சிதம்பரம் அறிக்கை அளித்துள்ளார். இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 47 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் 20 நிமிடத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து ஜுலை 20ல் டெல்லி போலீசுக்கு தகவல் தரப்பட்டது. டெல்லி போலீஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த நிலையிலும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சதி செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை உடனே கண்டறிய முடியவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நீதிமன்ற அலுவலக வரவேற்பு அறையின் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் உறுதியை சீர்குலைப்பதே குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்களின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மன உறுதி குலைய நாட்டு மக்கள் இடம் தரக் கூடாது என்றும் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக