தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி பரிசு அளிக்கப்படும் என்று, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
இளைஞர்கள் ஒரு நாட்டின் மதிப்பு மிக்க
செல்வம். கல்வியில் மேன்€ம் விளையாட்டு மற்றும் போட்டிகளில் திற€ம் சேவை மனப்பான்மைக்கு வித்திடும் வகையில் சமுதாயத் தேவைகள் குறித்த விழிப்புணர்வு, ஆகியவை ஒரு மாணவனை சிறந்த மனிதனாக உருவாக்க உதவுகின்றன. விளையாட்டுப் போட்டிகள் தேசிய மாணவர் ப€ட் நாட்டுநலப் பணித் திட்டம் மற்றும் சாரண சாரணியர் இயக்கம் ஆகியவை நற்பண்புகளை இளைஞர்களுக்குப் புகட்டி அவர்களை நாளைய பொறுப்புள்ள குடிமக்களாக மலரச் செய்கிறது.
குறிப்பாக, விளையாட்டு என்பது ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் நேர்மையாகச் செயல்படும் பக்குவத்தையும் கற்றுத் தருவதுடன் வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனத் திண்மையையும் அளிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, விளையாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இளைஞர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தினை வளர்க்கும் நோக்கத்துடனும் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது, 1992 ஆம் ஆண்டு, இளைஞர் மற்றும் விளையாட்டுப் பயிற்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு வளர்ச்சி வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு இணையான, "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்", என்ற ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது.
உலகத் தரம் வாய்ந்த ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம், ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம், வேளச்சேரி நீச்சல் வளாகம் ஆகிய விளையாட்டு அரங்குகள் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தான் உருவாக்கப்பட்டன என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள். மேலும், விளையாட்டு மேம்பாட்டிற்காக எனது ஆட்சிக் காலத்தில் தான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது என்பதையும் இந்த மாமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். அந்த வகையில், தற்போது, விளையாட்டு மேம்பாட்டிற்காக எனது தலைமையிலான அரசு செயல்படுத்த இருக்கும் புதிய திட்டங்கள் குறித்து நான் இந்த மாமன்றத்தில் தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
10 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட, விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு விளையாட்டில் உயர்தர நுணுக்கங்களுடன் கூடிய விஞ்ஞான ரீதியான பயிற்சி அளிப்பதற்கென சென்னையில் உலகத் தரம் வாய்ந்த முதன்மை நிலை விளையாட்டு மையம், அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர்கள் இந்த மையத்தில் தங்கி சிறப்பு பயிற்சி பெறுவர். இந்த மையத்தில் தங்கும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுச் சீருடை, விளையாட்டு உபகரணங்கள், நவீன உடற்பயிற்சிக் கூடம் விஞ்ஞான ரீதியிலான பயிற்ச் வெளிநாடுகளில் போட்டிகளில் கலந்து கொள்ள உதவி மற்றும் பயிற்சி ஆகிய வசதிகள் செய்து தரப்படும். சென்னையில் உள்ள சிறந்த பள்ளிகளில் கல்வி பயிலவும், இந்த மாணவ, மாணவியர்களுக்கு அரசால் உதவி செய்யப்படும். இந்த மையம் அமைப்பதற்காக, அரசுக்கு, 1 கோடி ரூபாய் தொடரா செலவினமும் ஆண்டு ஒன்றுக்கு, 70 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும்.
ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற வாய்ப்புள்ள, திறன் வாய்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளைத் தயார் செய்வதற்கான ஒரு சிறப்புத் திட்டம் எனது அரசால் செயல்படுத்தப்படும். இதன்படி ஐந்து விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர்களை சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் வெளிநாடுகளில் போட்டிகளில் பங்கேற்கவும் விஞ்ஞான ரீதியில் சிறப்புப் பயிற்சி பெறவும் உயர்தர விளையாட்டுக் கருவிகள் மற்றும் பயிற்சிக் கருவிகள் வாங்கிடவும் சத்தான உணவு பெற்றிடவும் விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்களின் திறனை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் வகை செய்யும். ஆண்டு ஒன்றுக்கு 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்படும் ஊக்கத் தொகையை மேலும் உயர்த்தி வழங்க தற்போது எனது அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கான ஊக்கத் தொகை 1 கோடி ரூபாயில் இருந்து 2 கோடி ரூபாய் ஆகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாயில் இருந்து 1 கோடி ரூபாய் ஆகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாய் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத் தொகை 20 லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாய் ஆகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாயில் இருந்து 30 லட்சம் ரூபாய் ஆகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத் தொகை 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் ஆகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50,000 ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாய் ஆகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 10,000 ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாய் ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
தமிழ்நாட்டில், 9 விளையாட்டு விடுதிகளும் விடுதிகளுடன் கூடிய 3 விளையாட்டுப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 860 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்கும் வகையில், இந்த விளையாட்டு விடுதி மற்றும் பள்ளிகளில் சேர்க்கப்படும் வீரர்கள், வீராங்கனைகளின் எண்ணிக்கை 860லிருந்து 1,100 ஆக உயர்த்தப்படும். இதற்காக, அரசுக்கு, 1 கோடி ரூபாய் தொடரா செலவினமும் 1 கோடியே 16 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும்.
தமிழ்நாட்டில் தற்போது 9 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விளையாட்டு விடுதிகள் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள திறமை மிக்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்க இயலாத சூழ்நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு விளையாட்டு விடுதி வீதம், 23 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகளை அமைக்க எனது அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு விளையாட்டு விடுதியிலும் 60 மாணவ, மாணவியருக்கு உயர்தர பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு உணவு, உறைவிடம் மற்றும் இதர வசதிகள் அனைத்தும் வழங்கப்படும். முதற் கட்டமாக, 5 மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும். இதற்காக, அரசுக்கு, 3 கோடி ரூபாய் தொடரா செலவினமும் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும். தமிழ்நாட்டில், விளையாட்டு மேம்பாட்டிற்காக எனது தலைமையிலான அரசு எடுத்து வரும் சீரிய முயற்சிகளால், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வகையில், தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் திறன் மேம்படும் என்ற நம்பிக்கையை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த அறிவிப்புக்கு சட்டசபையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்து வரவேற்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக