தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.9.11

துபாயில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுக்கு ஜாமீன்

துபாய், செப். 7-  அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக துபாயில் போராட்டம் நடத்தி சிறை சென்ற இந்தியர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே கடந்த மாதம் டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு நாடுமுழுவதும் ஆதரவு பெருகியது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஆதரவு தெரிவித்து ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.  கடந்த மாதம் (ஆகஸ்டு) 21-ந் தேதி அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்கள் துபாயில் அல் மம்'‘ர் பீச் பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதற்கு அவர்கள் போலீசாரிடம் அனுமதி பெறவில்லை. இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே, அவர்களை ஜாமீனில் விடக் கோரி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. 

 
இந்த மனு மீதான விசாரணை கடந்த 25-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை இன்னும் முழுமை அடையவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது. அதை தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டது. ஆகவே, மீண்டும் மனு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

0 கருத்துகள்: