காதலில் தோல்வியுற்ற செங்கொடிகள் தீக்குளிக்கின்றனர் என்று அவதூறு செய்யும் தினமலர் நாளேட்டை எரித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் போராட்டம், புகைப்படங்கள்!
5.09.2011 பதிப்பில் “ராஜீவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்” (தினமலர் அந்த செய்தியை இணையத்தளத்திலிருந்து நீக்கிவிட்டதால் வேறொரு சுட்டி இணைக்கப்பட்டுள்ளது – வினவு)என்ற தலைப்பில் தினமலர் நாளேடு பார்ப்பன வன்மத்துடன் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்ற வெறியுடன் எழுதியிருந்த தினமலர் அதில் “காதல் தோல்வியால் தீக்குளிக்கும் செங்கொடிகள்” என்று அயோக்கியத்தனமாக எழுதியிருந்தது.
மூவர் தூக்கை நிறுத்த வேண்டுமென்று தன்னை எரித்துக் கொண்ட அந்த இளம்பெண்ணை கொச்சைப்படுத்தி இதே தினமலர் ஏற்கனவேயும் எழுதியிருந்தது. தற்போது அந்த அவதூறு காதல் தோல்வி என்று தூற்றுமளவு வெறுப்புடன் ஆடுகிறது. இதைக்கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அரசியல் அக்கறையுள்ள வழக்குரைஞர்கள் குறிப்பிட்ட தினமலர் நாளேட்டை எரித்து தங்களது எதிர்ப்பை காண்பித்தார்கள். அந்த போராட்டத்தின் புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம்.பார்ப்பன தினமலரின் சதியை வேரறுப்போம்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக