தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.6.11

நீதிமன்றத்தை அவமதிப்பது ஜெ.வுக்கு வாடிக்கை! ப.சிதம்பரம்


நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கைப்பற்றி தனது அவதூறான கருத்தை கூறி நீதிமன்றத்தை ஜெயலலிதா அவமதிக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலில் மோசடி செய்து நான் வெற்றி பெற்றதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறுவது, நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்ற மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப,
சிதம்பரம், அ.தி.மு.க., வேட்பாளரான ராஜகண்ணப்பனை குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மக்களவை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மோசடி மூலம், வெற்றி பெற்ற சிதம்பரம், அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.


இச்செய்தி குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ராஜகண்ணப்பன் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். முன்பு, மக்களவை தேர்தலில் அவர் பெற்ற வெற்றியை பறித்து நான் வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டதாக ஜெயலலிதா கூறுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது.


ஏனென்றால், இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதி,மன்றத்தில்  கடந்த 2009, செப்டம்பரிலிருந்து நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தை  அவமதிப்பது, அவருக்கு வாடிக்கையான ஒன்று. எனவே, என்னை பற்றி அவர் கூறிய கருத்து ஒன்றும் புதிதல்ல. மக்களவை தேர்தல் முடிவே தில்லு முல்லு என்று கூட அவர் சொன்னாலும் சொல்வார்' என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: