தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.6.11

அல் கொய்தா இயக்க புதிய தலைவராக அல் ஜவாஹிரி நியமனம்

இஸ்லாமாபாத், ஜூன். 16-   அல் கொய்தா இயக்கத்தின் புதிய தலைவராக அல் ஜவாஹிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அல் கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் கடந்த மே மாதம் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் அந்த இயக்கத்தின் புதிய தலைவராக எகிப்து நாட்டை சேர்ந்த ஷேக் அய்மன் அல் ஜவாஹிரி (வயது 59) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் இஸ்லாமிய இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ காட்சியில் ஜவாஹிரி 28 நிமிடங்கள் தோன்றி இஸ்லாமிய மண்ணில் உள்ள வேற்று நாட்டவர்களை வெளியேற்றும் வரை எங்களது புனித போர் தொடரும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: