தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.6.11

முஸ்லிம் சிறுமி ஆருஷி தல்வார் கொலை - சி.பி.ஐ. விசாரணை


சிறுமி மானபங்கப்படுத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடத் தயார் என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.



உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலீஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை லக்கிம்பூரைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
செய்யப்பட்டார். அவருடைய உடல் தூக்கில் தொங்கவிடப்பட்டு இருந்தது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமி கொலை பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி லக்னௌவில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:

போலீஸ் நிலையத்தில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் தப்ப முடியாது.
அந்த சிறுமியின் பெற்றோர் சிபிஐ விசாரணைக்கோ அல்லது வேறு ஏதேனும் விசாரணைக்கோ விரும்பினால் அதற்கு எனது அரசு தயாராக உள்ளது. ஆனால் நொய்டா அருகே சிறுமி ஆருஷி தல்வார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து குழப்பியதைப் போல் இதுவும் ஆகிவிடக்கூடாது என்று நினைக்கிறேன்.



பெண்களுக்கு எதிராக இப்படி குற்றங்கள் நடக்கும்போது எதிர்க்கட்சிகள் இவ்வாறு குரல் எழுப்புவது வாடிக்கையாகி விட்டது. எதிர்க் கட்சிகள் இப்படி மோசமான அரசியல் நடத்தக்கூடாது.

எஸ்.பி இடைநீக்கம்: சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்.பி. டி.கே.ராய் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிறுமி கொலை செய்யப்படவில்லை. தற்கொலை செய்து கொண்டதாக முதல் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. சிறுமி கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். ஆனால் கற்பழிக்கப்படவில்லை என்று 2-ம் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தை தவிர நாட்டின் எந்தப் பகுதியிலும் தலித்துக்கு எதிராக வன்முறை நடந்தால் மத்திய அரசு விசாரணைக் குழுவை அனுப்புவது இல்லை. தில்லியில் காங்கிரஸ் அரசு இருப்பதால் அங்கு பெண்களுக்கு எதிராக வன்முறை நடந்தாலோ அல்லது வேறு குற்றங்கள் நடந்தாலோ விசாரணைக்குழு விசாரிப்பது இல்லை.



நாடகம்: லோக்பால் மசோதாவை தயாரிப்பதில் சமூக நல ஆர்வலர்களுக்கும்,மத்திய அரசு உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது நடிப்பது ஒரு நாடகமாகும். இப்போது உள்ள சூழ்நிலையில் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறாது. லோக்பால் மசோதா பிரச்னையை 2014-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் புதிய உறுப்பினர்கள் பொறுப்பில் விட்டுவிடலாம். இதை நான் ஒரு யோசனையாகத் தெரிவிக்கிறேன். இதை ஏற்பதும், ஏற்காததும் சமூக நல ஆர்வலர்கள் விருப்பம் என்று மாயாவதி தெரிவித்தார்.

0 கருத்துகள்: