தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.3.11

தேர்தலில் போட்டியிட அல்பராதி நிபந்தனை

கெய்ரோ,எகிப்தில் ராணுவத்தின் உத்தரவின்படி சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதால் மட்டும் நான் அதிபர் பதவிக்கு போட்டியிட தயாரில்லை என முன்னாள் சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் தலைவர் முஹம்மது அல் பராதி தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார்.

ராணுவம் ஜனநாயக அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளிக்கவேண்டும். அரசியல் சட்டதிருத்தங்கள் வரவேற்கத்தக்கதே. ஆனால், அதிபருக்கு

வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைக்கும் சட்டப் பிரிவு இன்னமும் அரசியல் சட்டத்தில் உட்படுத்தப்படவில்லை என அல்பராதி சுட்டிக்காட்டினார்.

முபாரக் பதவி விலகியபிறகு ஆறுமாதத்திற்குள் அதிபர் மற்றும் பாராளுமன்றத்திற்கான தேர்தலை நடத்தி முடித்து அதிகாரத்தை ஒப்படைப்போம் என ராணுவம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: