டென்மார்க் 12.03.2011 அதிகாலை
புறுக்சல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களின் விசேட மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் லிபியாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு பெரும் தயக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் காட்டிய காரணத்தால் கூட்டம் பெரும் பின்னடைவுடன் முடிவடைந்துள்ளது. மேலும் ஒரு இஸ்லாமிய நாட்டின் மீது மேலை நாடுகள்
தாக்குதலை நடாத்தினால் ஆபிரிக்க வட்டகையிலும் புதுப்புதுத் தலைவலிகளை சுமக்க நேரிடும் என்ற அச்சம் இவர்களிடையே காணப்பட்டுள்ளது. ஆனாலும் லிபியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கையை எடுப்பதற்கு பிரான்ஸ் தயார் என்று அறிவித்தது. ஆனால் மறுபுறம் ஜேர்மனி முற்றாகவே மறுத்துள்ளது. வன்பரப்பில் கடாபியின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கும் பூரண உடன்பாடு காணப்படவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு ஏற்பவே நேட்டோவும் தனது கருத்தை தெரிவித்துள்ளது. அதேவேளை நாளை அரபுலீக்கின் முக்கிய மாநாடு நடைபெறுகிறது. அவர்கள் தரப்பில் இருந்து ஏதாவது நகர்வு வரும் என்று எதிர்பார்த்துள்ளனர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள். இதற்கிடையில் கடாபிக்கு வழங்கிய 72 மணி நேரங்கள் முடிவடைந்து அவருடைய படைகள் கிழக்கு லிபியாவின் முக்கிய நகர் பெங்காஸி நோக்கி விரைவதாகவும், தமது சகோதரர்களை மீட்கப்போகிறோம் என்று கடாபியின் மகன் தெரிவித்துள்ளார். வாரோட்டம் போல இரு தரப்பிற்கும் இடையே முன்னேறுவதும் பின்னேறுவதுமாக படை நடவடிக்கை உள்ளதுசெய்தி: அலைகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக