தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.3.11

தினமலர் மீது மானநஷ்ட வழக்கு ?

தினமலர் நாளேட்டின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வது குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் உத்தரவின் பேரில், சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இன்றைய தினமலர் நாளேட்டின் முதல் பக்கத்தில், ஜப்பானைத் தாக்கிய சுனாமியையும், தயாளு அம்மாள் விசாரிக்கப் பட்டதையும், இணைத்து, சுனாமி என்ற பெரிய தலைப்பை போட்டு ஜப்பானை புரட்டிப் போட்டது, திமுகவை கலங்கடித்தது என்று படத்தோடு செய்தி வெளியிட்டிருந்தது  
இச்செய்தியைப் பார்த்து, கடும் கோபம் அடைந்த கருணாநிதி உடனடியாக தினமலர் நாளேட்டின் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உத்தரவிட்டதாகத் தெரிகிறது.   இதையடுத்து, மதுரையில் உள்ள ஒரு வழக்கறிஞரோடும், சட்டத் துறை செயலாளர் தீனதயாளனோடும், இன்று ஆலோசனையில்
ஈடுபட்டதாகவும் தெரிகிறது.  சட்ட வல்லுனர்கள் இந்த விவகாரத்தை ஆலோசித்து விட்டு, தினமலர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில், தயாளு அம்மாளோடு, அரசு கூடுதல் வழக்கறிஞர் (Additional Government Pleader) பரந்தாமன் நின்று கொண்டிருப்பதாகவும், சிபிஐ விசாரணை நடத்தும் போது, அரசு வழக்கறிஞர், விசாரிக்கும் நபரோடு இருப்பது, மரபு மீறல் என்றும், சட்டச் சிக்கலை உருவாக்கும் என்றும் கருத்து தெரிவித்ததால், எப்படி வழக்கு தொடர்வது என்று, யோசித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.  நன்றி : சவுக்கு

0 கருத்துகள்: